197 நாட்களுக்கு பின் தொடங்கப்பட்ட உழவர் சந்தை

Author: Udayaraman
5 October 2020, 3:46 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் 197 நாட்களுக்குப் பின்னர் உழவர் சந்தை இன்று முதல் இயங்கத் தொடங்கியது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சண்டை மேடு பகுதியில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. மேலும் இந்த உழவர் சந்தையை வாணியம்பாடி சுற்றியுள்ள ஆலங்காயம், ரெட்டியூர், காவலூர், சத்திரம் வீரராக வலசை, பீமா குளம் செக்குமேடு உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 250 விவசாயிகள் தங்களுடைய வெடிபொருட்களை இந்த உழவர் சந்தைக்கு கொண்டு வந்து பொது மக்களுக்கு நேரடி விற்பனை செய்து வந்தனர். கடந்த 197 நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்த உழவர் சந்தையை வாணியம்பாடியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்திற்கு இடமாற்றம் செய்து அங்கு தற்காலிகமாக அங்கு இயங்கி வந்தது.

இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் சமூக இடைவெளியுடன் முகாகவசம் அணிந்து பாதுகாப்புடன் இயங்க மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார். ஏற்கனவே 250 விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்து வந்த நிலையில், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் நாள் ஒன்றிற்கு 100 விவசாயிகள் மட்டுமே உள்ளே சென்று விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உள்ளே சென்று விற்பனை செய்யும் விவசாயிகள் மற்றும் பொருட்கள் வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் உள்ளே சென்று சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று உழவர் சந்தை நிவாக அலுவலர் முருகதாஸ் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் இன்று முதல் நாள் என்பதால் வாடிக்கையாளர்கள் வருகை குறைவாக உள்ளது.விற்பனையும் சற்று மந்தமான நிலையில் உள்ளது என்று விவசாயிகள் கூறுகின்றனர்

Views: - 36

0

0