விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் மனு

2 March 2021, 6:28 pm
Quick Share

அரியலூர்: விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட டெல்டா பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடி செய்து அறுவடை பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நெல்பயிர்கள் பாதிக்கபட்டு உள்ளதாகவும், மேலும் கரைவெட்டி பரதூர் கிராம நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை எடுக்கவில்லை எனக்கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்த நிலையிலும் இன்று வரை நெல் கொள்முதல் செய்யவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் 20,000 மூட்டை நெல்லினை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க அக்கிராம விவசாயிகள் இன்று வந்திருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் சென்று கொண்டிருந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முற்பட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் ரத்னா காரில் இருந்து இறங்கி வந்து குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதியளித்தார். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்க.சண்முகசுந்தரம், தங்கமலை, கரைவெட்டி பரதூர் ஊராட்சிமன்ற தலைவர் கணேசன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் செல்லப்பிள்ளை உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Views: - 4

0

0