வெங்காயத்தைக் கொட்டி சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்

25 January 2021, 4:40 pm
Quick Share

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெங்காயத்தைக் கொட்டி சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கன மழையின் காரணமாக சின்ன வெங்காய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருச்சி மாவட்டம், நரசிங்கபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில்
விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனவே அரசு பாதிக்கப்பட்டவிவசாயிகளை கண்டறிந்து ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் உடனே வழங்க கோரி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

அப்போது மாவட்ட ஆட்சியர் இல்லாததால் விவசாயிகள் கொண்டு வந்த சின்ன வெங்காயத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் கொட்டி தரையில் படுத்து கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பினர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் திருச்சி மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Views: - 5

0

0