விவசாயிகள் டிராக்டர் பேரணி : காவல்துறையின் தடுப்புகளை டிராக்டரால் மோதி தூக்கி வீசி போராட்டம்

26 January 2021, 5:14 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூரில் விவசாயிகள் டிராக்டர் பேரணி காவல்துறையின் தடுப்புகளை டிராக்டரால் மோதி தூக்கி வீசி போராட்டம் நடைபெற்றது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினமான இன்று டிராக்டர் பேரணியில் டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

திருவாரூரில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி, தண்டலை உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் பேரணி செல்ல அனுமதிக்காததால் டிராக்டரால் காவல்துறை தடுப்புகளை மோதி தூக்கி வீசி பேரணி நடத்தப்பட்டது. பேரணியின்போது காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் திருவாரூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பங்கேற்றன.

Views: - 7

0

0