ஊராட்சி செயலாளரை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம்: ஆட்சியரிடம் மனு அளித்த மூதாட்டி

Author: Udayaraman
5 October 2020, 5:06 pm
Quick Share

விருதுநகர்: ஒ. கோவில்பட்டி ஊராட்சி செயலாளரை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி தரக் கோரி சுந்தரி என்ற மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் சுந்தரி. இவர் அந்த ஊராட்சியில் தூய்மை காவலர் பணியாளராக 2019 ம் ஆண்டு முதல தற்காலிகமாக செய்து வந்துள்ளார். பணியில் சேர்ந்து சில மாதங்கள் சம்பளம் கொடுக்கப்படதாகவும், பின்னர் மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்லை எனக் கூறி தனது சம்பளத்தை வழங்க கோரி ஊராட்சி செயலாளரிடம் கேட்டதற்கு தன்னை பணி நீக்கம் செய்து விட்டதாகவும், ஊதியம் வழங்க முடியாது எனக் கூறி தகாத வார்த்தையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து தனது நிலுவை சம்பளத்தை வழங்க கோரி மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக முதலமைச்சருக்கும், தலைமை செயலாளருக்கும் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அக்டோபர் 12 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி தரக் கூறி மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் மூதாட்டி சுந்தரி மனு அளித்தனர். இந்த மனுவால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 39

0

0