பட்டம் மற்றும் மாஞ்சா நூல் தயாரித்து விற்ற தந்தை மற்றும் மகன் கைது

11 July 2021, 3:38 pm
Quick Share

சென்னை: திரு.வி.க நகரில் தடை செய்யப்பட்ட பட்டம் மற்றும் மாஞ்சா நூல் தயாரித்து விற்ற தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விடுவதற்கு சென்னை மாநகர போலீஸ் தடை விதித்துள்ளது.அதனை மீறி பல இடங்களில் பட்டம் விட்டுபவர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். பட்டம் விடுபவர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் சென்னை திரு.வி.க நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பட்டம் மற்றும் மாஞ்சா நூல் விற்கப் படுவதாக திரு.வி.க நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் திரு. வி. க நகர் நிலம் தோட்டம் 2வது தெரு பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அக்மிலோ ரோகுஸ் 42 ,  அவரது மகன் ஜெகட் ரோகுஸ் 21 ஆகிய இருவரும் வீட்டில் 50 த்திற்கும் மேற்பட்ட பட்டங்கள் மற்றும் 9 நூல்கண்டுகள் உள்ளிட்டவற்றை வைத்திருந்தனர். இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த திரு.வி.க நகர் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 107

0

0