நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்
Author: kavin kumar4 November 2021, 7:46 pm
கோவை: கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை காந்திபுரம் தந்தை பெரியார் திராவிட கழகத்தின தலைமை அலுவலகத்தில் நரகாசூரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழர்களின் மூதாதையாரான நரகாசுரன் இறப்பு கொண்டாடப்படிக்கூடிய விழா அல்ல எனவும், வீர வணக்கம் செலுத்தகூடிய நாள் என குறிப்பிட்டார். மேலும் தமிழ் வம்சவளி வந்த மன்னனின் இறப்பிற்கு வீரவணக்கம் செலுத்தும் நாளை தமிழர்களே வெடி வைத்து, இனிப்பு வழஙகி கொண்டாட கூடாது என தபெதிக பொதுச்செயலாளர் கு ராமகிருட்டிணன் வலியுறுத்தினார். தீபாவளி என்பது நரகாசுரனை அழித்த நாள் அல்ல எனவும், அதற்கு முன்னரே கொண்டாடப்பட்டு வந்துள்ளதாக கூறினார். மேலும் ஆண்டுதோறும், தீபாவளியை கொண்டாட கூடாது என்பதை , பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே மாவீரன் நராகசுரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மாட்டுக்கறி பிரியாணியை அனைவருக்கும் வழஙகினர்.
0
0