கவுன்சிலர்கள் கூட்டத்தில் சுயேச்சை உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம்: நாற்காலியை எடுத்து வீசியதால் பரபரப்பு…

Author: Udhayakumar Raman
8 September 2021, 8:31 pm
Quick Share

திண்டுக்கல்: நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் மற்றும் திமுக . பா.ம.க-சுயேச்சை உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் முற்றியதால் நாற்காலியை எடுத்து வீசியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 20 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் ஒன்றிய அலுவலகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 20 உறுப்பினர்களில் அதிமுக உறுப்பினர்கள் 10 பேர், இரண்டு சுயேச்சைகள் ஆதரவுடன் அதிமுக தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்றியது. இந்நிலையில் அதிமுக ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு துணைத் தலைவருமான யாகப்பன் தனது உறவினரை தலைவராக ஆக்கிக்கொண்டு ஊராட்சி ஒன்றியத்தில் பல திட்டங்களில் முறைகேடு செய்து வருவதாகவும்,

சுயேச்சை உறுப்பினர்கள் மற்றும் பா.மக உட்பட திமுக உறுப்பினர்களின் வார்டுகளுக்கு தேவையாக நிதி ஒதுக்காமல் புரக்கணிப்பதாகவும் கூறி தற்போதைய சட்டமன்ற தேர்தலுக்கு பின் இரண்டு கூட்டங்களுக்கு பாமக மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இருவர் என திமுகவிற்கு ஆதரவு அளித்து கடந்த இரண்டு கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்தனர். ஊராட்சி கூட்டமும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் இருதரப்பினரும் கலந்து கொண்டதை அடுத்து ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன் அதிமுக சின்னத்திலும், அதிமுக ஆதரவோடும் அதிமுக ஆட்சியில் வெற்றி பெற்றவர்கள் தற்போது திமுக-விற்கு ஆதரளிப்பதாகவும்,

அதனால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் நின்று வெற்றி பெற்று திமுகவுக்கு ஆதரவு அளித்துக்கொள்ளுங்கள் என சில தவறான வார்த்தைகளை பயன்படுத்தி கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அதிமுக கவுன்சிலர்கள், சுயேச்சைகள் பாமகவினர் கூட்டத்தில் நாற்காலி வீசி ரகளையில் ஈடுபட்டனர். பதிலுக்கு அதிமுகவினரும் அவர்களை நோக்கி நாற்காலிகளை வீசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து கூட்டத்தை புறக்கணித்து வெளியேறிய திமுக மற்றும் ஆதரவு சுயச்சை பாமக உறுப்பினர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவரும் ஒரே குடும்பத்தினர் என்பதால் ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி உறுப்பினர்கள் வெளியேறினர்.

Views: - 122

0

0