குருணை விஷம் கலந்த அரிசியை தின்ற 15 ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு

Author: kavin kumar
13 October 2021, 4:56 pm
Quick Share

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே குருணை விஷம் கலந்த அரிசியை தின்ற 15 ஆடுகள் உயிரிழந்ததையடுத்து ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் எலந்தங்குடி அடுத்த அரிவலூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் பின்புறம் யாரோ ஒரு மர்ம நபர் குருணை விஷம் கலந்த அரிசியை கலந்து ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் வைத்துள்ளார். அந்த பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் 15 ஆடுகள் அந்த அரிசியை தின்றன சிறிது நேரத்தில் விஷம் தலைக்கேறி பரிதாபமாக உயிரிழந்தன. விவசாயிகள் விவசாயக் கூலித் தொழிலாளிகள் வளர்ந்து வரும் 15 ஆடுகள் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாயாகும் வயலில் எலிகளை கட்டுப்படுத்த தயார் செய்த குருணை அரிசியை இருக்கலாம் அல்லது யாராவது மர்ம நபர்கள் விஷம் வைத்தார்களா என்பது பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Views: - 177

0

0