ஈரோட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

20 January 2021, 3:30 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டார்.ஈரோட்டில் 19,57,203 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டு பெயர் சேர்த்தல், நீக்கல், உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். ஈரோட்டில் ஆண்கள் 9,53,767, பெண்கள் 1,03,332, திருநங்கையர் 104 பேரும் என மொத்தம் 19,57,203 வாக்காளர்கள் உள்ளனர். இதில் புதியதாக 58,620 பேர் சேர்க்கப்பட்டும், 17948 பேர் நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

Views: - 1

0

0