பிரதமருக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம்

2 September 2020, 6:45 pm
Pondy Cm Byte- updatenews360
Quick Share

புதுச்சேரி: மாநிலங்களுக்கான நிதியை மத்திய அரசு ரிசர்வு வங்கியிடமோ அல்லது வெளிமார்க்கெட்டிலோ கடனாக பெற்று வழங்க வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் “வசதி கொண்ட 600 படுக்கைகள் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஜிப்மரிலும் கூடுதல் படுக்கைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மத்திய அரசு எல்லா தளர்வுகளையும் அறிவித்துள்ளது என்றும், இந்த நிலையில் பொதுமக்களும் விழிப்புணர்வு இல்லாததாலும் விதிமுறைகளை பின்பற்றாததால் நோய் தொற்று அதிகரிப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு கொடுக்க வேண்டிய சிறப்பு நிதி உள்ளிட்ட எந்த நிதியும் வழங்காத நிலையில் மாநில வருவாயில் மாநிலத்தை நிர்வகித்து வருவதாக கூறிய அவர், மாநிலங்களுக்கான நிதியை மத்திய அரசு ரிசர்வு வங்கியிடமோ அல்லது வெளிமார்க்கெட்டிலோ கடனாக பெற்று வழங்க வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தனியார் மருத்துவமனை குறித்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வருவதாகவும், குறைவான அறிகுறி உள்ளவர்களை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பராமரிப்பது இல்லை என்று கூறப்படுகிறது என்றும், எனவே இது குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகத்தை அழைத்து பேச உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

Views: - 6

0

0