நிதி நிறுவன ஊழியரின் இருசக்கர வாகனம் திருட்டு: வெளியான சி.சி.டி.வி காட்சிகள்

Author: Udhayakumar Raman
16 October 2021, 4:29 pm
Quick Share

சென்னை: தனியார் நிதி நிறுவன ஊழியரின் இருசக்கர வாகனத்தை திருடிய நபரின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியானது.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் திலீப் குமார். இவர் பெரம்பூர் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 12 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்ற திலீப் குமார் அலுவலகத்திற்கு வெளியே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்குச் செல்ல மாலை வெளியே வந்த திலீப் குமார் தனது இருசக்கர வாகனம் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இது தொடர்பாக செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் செம்பியம் போலீசார் சம்பவ இடத்திலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது திலீப் குமாரின் இருசக்கர வாகனம் திருடப்படும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் பதிவாகி உள்ள திருடன் யார் ? பழைய குற்றவாளியா ? என்பது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 119

0

0