கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்

16 June 2021, 8:39 pm
Quick Share

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒருவனால் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் செயல்பட்டு 10 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அபராதம் விதித்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களை காட்டிலும் கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினசரி அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். மாஸ்க் அணியாதவர்களுக்கும்,

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர். அதன்படி இன்று கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் வார்டு எண் 25ல் கிருஷ்ணசாமி சாலையில் அமைந்துள்ள தனியார் வணிக வளாகத்தில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது கொரோனா தடுப்பு விதிகளை மீறி 10 கடைகள் செயல்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த கடைகளுக்கு ரூபாய் 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Views: - 95

0

0