மர சேமிப்பு கிடங்கில் தீவிபத்து.!! சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின

19 September 2020, 4:57 pm
Quick Share

காஞ்சிபுரம்: படப்பை அருகே மர சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட து விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான மரக்கட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவைகள் முற்றிலும் எரிந்து தீயில் கருகின.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியில் கார்த்திக் என்பவருக்கு சொந்தமான மர கிடங்கு கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த கிடங்கில் திடீரென தீ விபத்து நேரிட்டது. இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விபத்து நேர்ந்த இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மர கிடங்கில் மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயின் ஆக்ரோஷம் அதிகமாக இருந்ததால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாத வண்ணம் கூடுதலாக தீயணைப்பு வாகனம் வரவழைத்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணி மும்முரமாக ஈடுபட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கிடங்கில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான மரக்கட்டைகள் மரம் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவைகள் முற்றிலும் எரிந்து தீயில் கருகின. அதேபோல் அருகிலிருந்த கட்டடப் பணி செய்யும் கொத்தனார் கணேசன் என்பவரின் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து கருகியது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா இல்லை வேறு ஏதேனும் காரணமா என மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 9

0

0