ப்ளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: புகை மண்டலமாக காட்சியளித்த வானம்

Author: Udayaraman
2 August 2021, 7:57 pm
Quick Share

மதுரை: மதுரையில் ப்ளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விரகனூர் தொடங்கி தெப்பக்குளம் வரை வானம் முழுவதிலும் கரும்புகை எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் விரகனூர் அருகேயுள்ள கோழிமேடு பகுதியில் ஏராளமான ப்ளாஸ்டிக் கழிவ பொருட்கள் சேகரிப்பு குடோன்கள் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் இன்று மாலை அதே பகுதியில் செயல்பட்டுவந்த ரமேஷ் மற்றும் அண்ணாதுரை என்பவர்களுக்கு சொந்தமான ப்ளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேகரிப்பு குடோனின் திடிரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் குடோனில் வைக்கப்பட்டிருந்த அனைத்து ப்ளாஸ்டிக் கழிவுகளும் மலமலவென எரியத்தொடங்கியது.

இதனால் கரும்புகை மண்டலம் உருவாகியது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை தண்ணீர் மற்றும் நுரையை பயன்படுத்தி தீயை அணைத்தனர். ப்ளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விரகனூர் தொடங்கி தெப்பக்குளம் வரை வானம் முழுவதிலும் கரும்புகை எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ப்ளாஸ்டிக் குடோன்கள் உரிய அனுமதியுடன் செயல்படுகிறதா என்பது குறித்து போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Views: - 112

0

0