மின்கசிவு காரணமாக இரண்டு குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்

12 October 2020, 10:28 pm
Quick Share

காஞ்சிபுரம்: சோமங்கலம் அருகே மின்கசிவு காரணமாக இரண்டு குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் வயது 45. கூலித் தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் நேற்று இரவு தன் குடிசை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை இவரது குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. மேலும் இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள லோகநாதன் (வயது 38) கூலித்தொழிலாளி என்பவரது குடிசை வீட்டிலும் தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

உடனே சுதாரித்துக்கொண்ட லோகநாதன் மற்றும் சக்திவேல் குடும்பத்தார் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து குடிசை வீட்டை அணைக்க முயற்சித்தனர். குரோம்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இரண்டு வீடுகளும் கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயணைப்பு துறை வருவதற்கு முன்பே இரண்டு வீடுகளும் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின.

இதில் சக்திவேல் வீட்டில் இருந்த ஐந்து சவரன் நகை 20 ஆயிரம் பணம் மற்றும் லோகநாதன் வீட்டிலிருந்த 8 சவரன் நகை 15 ஆயிரம் பணம் மற்றும் அவர்களுடைய வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள், அரிசி முதலான சமையல் பொருட்கள், துணிமணி மற்றும் வீட்டிலிருந்த குடும்ப அட்டை ,ஆதார் கார்டு என அனைத்தும் எரிந்து சாம்பலாகின. இந்நிலையில் சக்திவேல் அவருடைய மனைவி சாந்தி அவர்களுடைய குழந்தைகள், மற்றும் லோகநாதன் அவருடைய மனைவி ஜானகி அவர்களுடைய குழந்தைகள் என அனைவரும் உண்ண உணவின்றி,

உடுக்க உடையின்றி தவித்து வருகின்றனர். இந்த தீ விபத்து மின்கசிவால் நடந்ததிருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தவித்தனர். சோமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 35

0

0