வெள்ளப்பெருக்கில் சிக்கிய விவசாயியை போராடி மீட்ட தீயணைப்பு துறை

27 November 2020, 2:37 pm
Quick Share

காஞ்சிபுரம்: மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற மாடுகளை அழைத்து வரும்போது பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மாட்டிக்கொண்ட விவசாயியை மிகவும் போராடி உயிருடன் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் விஷார் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் விவசாயி. இன்று காலை விவசாய வேலைகளை முடித்துவிட்டு மூன்று தன்னுடைய மூன்று மாடுகளை ஓட்டிக்கொண்டு பாலாற்றில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார் . மாலை நேரம் உணவருந்திவிட்டு மாடுகளை ஓட்டி வர பாலாற்றுக்கு சென்றார். அங்கிருந்து மாடுகளை அவிக்கும் போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. என்ன ஏது என சிந்திப்பதற்க்குள் முதியவர் வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்டார்.

புத்திசாலித்தனமாக அவர் கையில் வைத்திருந்த செல்போன் மூலமாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலை கேள்விப்பட்ட தீயணைப்புத்துறையினர் மிகவும் விரைந்து வந்து வெள்ளப்பெருக்கில் ஆற்றின் நடுவில் மேடான பகுதியில் மாட்டிக்கொண்டிருந்த லட்சுமிகாந்தனை கயிறு கட்டி மிகவும் போராடி மீட்டனர். அதேபோல் ஆற்றில் மாட்டிகொண்ட 3 மாடுகளையும் உயிருடன் பத்திரமாக மீட்டனர். தீயணைப்பு துறையினர் செயலை அப்பகுதி மக்கள் மிகவும் பாராட்டினர் .

Views: - 0

0

0