கிணற்றில் தவறி விழுந்த வாலிபரை மீட்ட தீயணைப்பு துறையினர்: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Author: kavin kumar13 November 2021, 3:23 pm
திருச்சி: திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த மீட்கப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள நல்லவன்னிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்து விட்டு வெளிநாட்டிலும் சென்னையிலும் வேலை செய்துள்ளார். தற்போது மழை பெய்துள்ளதால் விவசாயம் பார்ப்பதற்காக தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மின்மோட்டாரை இயக்குவதற்காக சென்றபோது தவறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தத்தை கேட்ட அதே கிராமத்தைச் சேர்ந்தராசு, காமேஸ்வரன் என்பவர்கள் காப்பாற்றுவதற்காக கிணற்றில் இறங்கினர்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் துறையூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் ராமசாமியை தலையில் பலத்த காயங்களுடன் கிணற்றில் இருந்து மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். ராமசாமியை காப்பாற்றுவதற்காக கிணற்றில் இறங்கிய ராசு, காமேஸ்வரன் ஆகியோரையும் கிணற்றில் இருந்து தீயணைப்புத் துறையினர் மீட்டனர். கிணற்றில் விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0
0