சாலை பாதுகாப்பு குறித்த தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

4 February 2021, 2:23 pm
Quick Share

திருச்சி: சாலை பாதுகாப்பு குறித்த தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருச்சி காவல் ஆணையர் நேரில் பார்வையிட்டார்.

32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி தீயணைப்பு துறை மற்றும் மாநகர போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் தலைமையில் இன்று நடந்தது. இதில், துணை ஆணையர் வேதரத்தினம், உதவி ஆணையர்கள் விக்னேஸ்வரன், முருகேசன், தீயணைப்பு மாவட்ட அலுவலர் (பொறுப்பு) கருணாகரன், நிலைய அலுவலர் மெல்க்யு ராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கால் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த தீத்தடுப்பு ஒத்திகை குறித்து விளக்கத்தை செய்து காட்டினார்கள். இதில் சாலை விபத்தின் போது பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொண்டால் அதி நவீன இயந்திரங்கள் கொண்டு எப்படி மீட்பது என்றும், வாகனத்தில் ஏற்படும் தீயை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர். மேலும் தீயணைப்பு துறையில் உள்ள மீட்பு பொருட்களை பொதுமக்கள் கண்காட்சிக்காக வைத்திருந்தனர்.

Views: - 0

0

0