மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ள தீயணைப்பு வீரர்கள்

24 November 2020, 6:17 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் 130 பேர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்

நிவர் புயல் எச்சரிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் மீட்பு பணிக்கான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்பதை திருவாரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறைமாவட்ட அலுவலர் அனுசியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இவர் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 12 தீயணைப்பு நிலையங்களிலும் 130 தீயணைப்பு வீரர்களும் புயல் மழை பாதிப்பு குறையும் வரை விடுப்பு எடுக்காமல் 24 மணி நேரமும் ஈடுபட உள்ளனர். மழை வெள்ளம் மீட்புப் பணிக்காக உள்ள வீட்டு உபகரணங்கள் ஆய்வு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர் அனுசியா தெரிவித்தார்.

Views: - 18

0

0