பட்டாசு வெடி விபத்து குறித்து 8 பேர் கொண்ட குழு ஆய்வு

26 February 2021, 3:27 pm
Quick Share

விருதுநகர்: சாத்தூர் அருகே கடந்த 12ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்திற்கான காரணம், மற்றும் விபத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து சம்மந்தமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. இதில் சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், மத்திய அரசு முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவை நிர்ணயித்தது. இந்தக் குழு இன்று அச்சங்குளம் பட்டாசு ஆலையை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பட்டாசு வெடி விபத்திற்கான காரணம், மற்றும் விபத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்தனர். இந்த ஆய்வில் அவருடன் வெம்பகோட்டை தாசில்தார், சாத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர், விருதுநகர் மாவட்ட சப்-கலெக்டர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர் கொண்டு பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 7

0

0