முதலாம் ஆண்டு கல்லூரி நேரடி வகுப்புகள் இன்று துவக்கம்: உற்சாகத்துடன் கல்லூரி வந்த மாணவ – மாணவிகள்…

Author: kavin kumar
4 October 2021, 2:18 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் முதலாம் ஆண்டு கல்லூரி நேரடி வகுப்புகள் இன்று துவங்கியதையடுத்து உற்சாகத்துடன் கல்லூரி மாணவ – மாணவிகள் வந்தனர்.

உலகையே உலுக்கி வந்த கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆலோசனை அடிப்படையில் வெளியிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கல்லூரிகளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் முதலாமாண்டு வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகளும் தொடங்கப்படும் என கல்லூரி கல்வி இயக்கம் அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாலிடெக்னிக், இன்ஜினியரிங், கலைக்கல்லூரிகளில் முதலாமாண்டு நேரடி‌ வகுப்புகள் துவங்கப்பட்டது.கல்லூரிகளில் புதிதாக முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவ – மாணவிகள் காலை முதலே ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கல்லூரிகளில் வரத் தொடங்கினர். கல்லூரிக்கு வந்த மாணவ – மாணவிகளுக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டு கிருமி நாசினி வழங்கப்பட்டு கல்லூரியின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஒவ்வொரு வகுப்பறையில் 50சதவீத மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டு நேரடி வகுப்புகள் துவங்கியது.

Views: - 189

0

0