விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் முதலாவது ஆண்டு நவராத்திரி பெருவிழா

Author: Udhayakumar Raman
16 October 2021, 6:56 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் முதலாவது ஆண்டு நவராத்திரி பெருவிழா 10 நாள் துர்கா பூஜை நிகழ்ச்சியாக சிறப்பு ஹோமம் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றுது.

நவராத்திரியை முன்னிட்டு கடந்த 6 ஆம் தேதி வைத்திக்குப்பம் கடல் பகுதியில் இருந்து கரக புறப்பாடுடன் சாரம் அவ்வை திடலில் கலச வாகனம் மற்றும் சிறப்பு யாகத்துடன் விழா தொடங்கப்பட்டது. 9 வது நாள் நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் துர்கை தினமும் ஒரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து, 10 வது நாள் நிகழ்ச்சியாக மகிஷாசூரமர்த்தினியாக அவதாரம் எடுத்து அசுரனை வதம் செய்யும் அம்புவிடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக வைத்திக்குப்பம் மாசிமாகம் கடலில் ஊர்வலத்த்துடன் துர்கை விசர்ஜனம் நடைபெற்றது.

இதில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கரகாட்டம், உடுக்கை மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் புராண நாடகம், ஆகியவைகள் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசங்கரன், ராமலிங்கம்,விசுவ ஹிந்து பரிஷத் வடதமிழக மாநில செயலாளர் ஞானகுரு,வட தமிழக சமுதாய ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாத்ரு சக்தி பொறுப்பாளர் லட்சுமி, திருக்கோயில் மற்றும் திருமடங்கள் பொறுப்பாளர் சிவசந்திரகணேஷ்,கோவிந்தன், சக்தி, தினகரன் மற்றும் நிர்வாகிகள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Views: - 179

0

0