மீன்பிடி தடை காலம் மற்றும் ஊரடங்கு காரணமாக மீன் விலை கிடுகிடு உயர்வு

Author: Udayaraman
20 June 2021, 1:29 pm
Quick Share

திருவள்ளூர்: பழவேற்காட்டில் கொரோனா ஊரடங்கு மற்றும் மீன்களின் இனப்பெருக்ககா அறுபது நாள் தடை நீங்கி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில் மீன்கள் போதிய அளவில் கிடைக்காததால் மீன்களின் விலை அதிகரித்து விற்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் கொரோனா ஊரடங்கு மற்றும் மீன்களின் இனபெருக்கத்திற்கான அறுபது நாள் தடை காராணமாக மீனவர்கள் அறுபது நாட்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இத்தடைகாலம் நீங்கி மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீனவர்களுக்கு போதிய மீன்கள் கிடைக்காததால் மீன் சந்தையில் குறைவான மீன்களே இருப்பதால் மீன்களின் விலை அதிகமாக வீற்கப்படுகிறது. பழவேற்காட்டில் இருந்து மீன்கள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ வஞ்சிரம்மீன் 1,100 ரூபாய்க்கும், ஒரு கிலோ இறால் 350 ரூபாய்க்கும், ஒரு கிலோ கட்டுநண்டு 1000 ரூபாய்க்கும், கொடுவா மீன் 600 ரூபாய்க்கும் வீற்க்கப்படுகிறது. இதனால் வெளிமாநிலத்தில் இருந்து மீன் வாங்க வரும் மொத்த வியாபாரிகளும், உள்ளூர் சில்லறை வியாபாரிகளும் கடும் இன்னலுக்குள்ளாகின்றனர். மீன் சந்தையில் விலை அதிகமாக இருப்பதால் அசைவப்பிரியர்கள் பொதுமக்கள் அனைவரும் இறைச்சிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இறைச்சிகடைகளில் ஒருகிலோ கோழி இறைச்சி 240 ரூபாய்க்கும் ஒருகிலோ ஆட்டு இறைச்சி 700 ரூபாய்க்கும் விற்க்கப்படுகிறது.

Views: - 92

0

0