மீன்களை பிடித்து உலர வைத்து கருவாடாக்கும் பணியில் மீனவர்கள்…

14 August 2020, 4:06 pm
Quick Share

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து காரணமாக ஆற்றில் அதிகளவில் கிடைக்கும் அரஞ்சான் வகை மீன்களை பிடித்து உலர வைத்து கருவாடாக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆற்றில் கட்லா,ரோகு, கல்பாசை,வாளை மீன் மற்றும் அரஞ்சான் ரக மீன்கள் அதிகளில் கிடைக்கிறது. இதில் குறிப்பாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிகளவில் கிடைப்பது அரஞ்சான் ரக மீன், இந்த மீன் சுவையாக இருப்பதால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த ரக மீனை விரும்பி சாப்பிடுவார்கள்.

தற்போது ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடை செய்யபட்டுள்ளதால், ஆற்றில் கிடைக்கும் மீன்களை விற்பனை செய்ய முடியாததால் அரஞ்சான் ரக மீன்களை மீனவர்கள் பிடித்து வந்து உலர வைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதே போல் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளை நம்பி இருந்த மசாஜ் தொழிலாளர்கள் மற்றும் பரிசல் ஓட்டிகள் வேலை இழந்துள்ளதால் மீன்களை பிடித்து வந்து உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 6

0

0