ஐந்து தலைமுறை கண்ட அதிசய குடும்பம்: 101வது வயதில் அடியெடுத்து வைக்கும் மூதாட்டிக்கு பிறந்தாள் விழா

4 March 2021, 9:34 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டியில் 101வது வயதில் அடியெடுத்து வைக்கும் மூதாட்டிக்கு பிறந்தாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மாறிப்போன இயற்கைச்சூழல். மாறுபட்ட உணவு பழக்க வழக்க முறைகள் உட்பட பல்வேறு காரணங்களால் மனிதனின் ஆயுள்காலம் குறைந்து கொண்டே வருகிறது. முன்னொரு காலத்தில் நூறு,நூற்றி பத்து வயது என சர்வசாதாரணமாக வாழ்ந்து கொண்டிருந்த மனித இனம் இன்று என்பது வயதுகளை கூட எட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. இயந்திரமயமாகி போன மனித வாழ்க்கையில் மனிதர்கள் ஒவ்வொருவரும் அவசரகதியில் பரபரப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதில் உடல் நலத்தை பேணுவதில் யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.

கிடைத்த உணவை உண்டு காலம் போகிற போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இத்தகைய சூழலில் தங்களது உடல் நலத்தில் அக்கறை கொண்டு அதனை பேணி பாதுகாப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.லட்சத்தில் ஒருவர் கூட தேறமாட்டார்கள். அப்படி லட்சத்தில் ஒருவராக இருப்பவர்தான் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டியை சேர்ந்த மகாதேவன் மனைவி பழனியம்மாள். செஞ்சுரி அடித்து 101 -வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

அத்துடன் 5 தலைமுறைகளையும் கடந்து இருக்கிறார். இவருக்கு 4 மகன்கள் 3 மகள்கள், 19 பேரன், பேத்திகள்.25 கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகள்,2 எள்ளு பேத்திகள் உள்ளனர்.இவர் இன்றும் தனது பணிகளை தானே செய்து வருகிறார் ஆரோக்கியத்துடன். மனிதன் எப்படி ஆரோக்கியம் பேண வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து வரும் இம் மூதாட்டியை அவரது வாரிசுகள் அனைவரும் சேர்ந்து 101-வது பிறந்தநாளை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியர் மண்டபத்தில் வைத்து கேக் வெட்டியும், பாத பூஜைகள் செய்தும் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.

Views: - 10

0

0