ஸ்ரீ கௌசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் கொடியேற்றம்

15 November 2020, 4:55 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ரயில் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீ கௌசிக பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் 28-ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதுச்சேரி மாநிலம் ரயில் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீ கௌசிக பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் 28-ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருக்கல்யாண விழா கொடியேற்றம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொடியேற்றம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாள்தோறும் யானைமுகம் சம்ஹாரம், வேல் வாங்குதல், நடைபெற உள்ளது. வருகிற 20-ஆம் தேதி சூரசம்ஹார பெருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்.

Views: - 31

0

0