பாதுகாப்பு பணிக்காக வருகை தந்த துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு

1 March 2021, 8:47 pm
Quick Share

திருவாரூர்: சட்டமன்ற தேர்தலுக்காக பாதுகாப்பு பணிக்கு திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

திருவாரூர் எஸ் பி கயல்விழி தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பு நிகழ்வில் டெல்லியில் இருந்து முதல் கட்டமாக வருகை தந்துள்ள துணை ராணுவப் படை துணை கமாண்டர் விஜய் தலைமையிலான 92 துணை ராணுவப் படையினர் திருவாரூர் நகர பகுதிகளில் அணிவகுத்து சென்றனர். இந்த அணிவகுப்பில் துணை இராணுவப் படையினர் உடன் திருவாரூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உடன் சென்றனர்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவ படை மற்றும் போலீசார் இருப்பதை தெரியப்படுத்தி அச்சத்தை போக்குவதற்காகவே இதுபோன்ற அணிவகுப்புகள் நடத்தப்படுவதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. திருவாரூர் தெற்கு வீதி பகுதியில் கொடி அணிவகுப்பில் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் அணிவகுத்து சென்றனர் .

Views: - 1

0

0