ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி வெள்ளப்பெருக்கு! ஆர்ப்பரித்துக் கொட்டும் காட்சி!!

26 November 2020, 2:04 pm
Jalagamparai - Updatenews360
Quick Share

திருப்பத்தூர் : தொடர் மழையின் காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் மழை நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்மாபட்டு ஊராட்சியில் ஏலகிரி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நீர்வீழ்ச்சியாக ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி திகழ்ந்து வருகிறது.

தற்பொழுது கடந்த இரு தினங்களாக மாவட்டத்தில் நிவர் புயல் தாக்கத்தின் காரணமாக இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக ஏலகிரி மலை பகுதியிலிருந்து ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால். ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தற்பொழுது மழை நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஆனால் தற்பொழுது ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Views: - 0

0

0