பூ மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

Author: Udhayakumar Raman
9 September 2021, 2:56 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி பூ மார்க்கெட்டில், பூக்களின் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, தொப்பூர், கடத்தூர், மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மல்லிகைப்பூ கனகாம்பரம் .சம்பங்கி. சாமந்தி பூக்களை பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். மாவட்டத்தில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து உள்ளதாலும் அதிக அளவில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளனர் தற்போது நிலவும் சீதோசன நிலைக்கு பூ விளைச்சல் அதிகரித்துள்ளது. விவசாயிகள் சாகுபடி செய்த பூக்களை தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் பூ மார்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வந்து விற்பது வழக்கம். தற்போது திருமணம சீசன் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் வருவதாலும் விவசாயிகள் மாவட்டத்தில் அதிகளவு பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழா பொது இடங்களில் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டு இருப்பதால் பூக்களின் தேவை குறைந்துள்ளது. அதேபோல் திருமண விசேஷங்களுக்கு அதிக அளவு பொதுமக்கள் அதிக அளவு கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற உத்தரவு போட்டிருப்பதாளும் பூக்கள் தேவை குறைந்துள்ளது அதேபோல் தருமபுரி மாவட்டத்தில் வெளி மாவட்டங்களுக்கு அதிக அளவு பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்திருந்தனர். தற்போது பூக்கள் ஏற்றுமதி குறைந்து விட்டது என்ற நிலையிலும் பூக்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது.

சென்ற வாரத்தை காட்டிலும் இந்த வாரம் பூக்களின் விலை 80 சதவீதம் குறைந்துள்ளது.சென்ற வாரம் 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட சாமந்திப்பூ இன்று 20 க்கும் , 1500 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ரோஜா நேற்று கிலோ 120 விற்கப்பட்ட நிலையில் இன்று கிலோ 30 ரூபாய்க்கும் கனகாம்பரம் கிலோ 600 ரூபாய்க்கும். சம்பங்கி பூ கிலோ 320 ரூபாயிலிருந்து 220 ரூபாய்க்கும். செண்டுமல்லி கிலோ 10 ரூபாய்க்கும்.பட்டன் ரோஸ் கிலோ 20 ரூபாய்க்கும்.20ரோஸ் கொண்ட ஒரு கட்டு ரூ 80 லிருந்து 40 ரூபாய்க்கும் விலை குறைந்து விற்பனையானது. பூக்களின் விலை சரிவால் பூக்கள் பயிரிட்ட விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர் இன்னும் இரு வாரங்களுக்கு பூக்கள் குறைந்தும் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை காலங்களில் பூக்கள் விலை உயரும் என எதிர்பார்த்து காத்திருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Views: - 123

0

0