பொங்கல் பண்டிகை: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விற்பனை அதிகரிப்பு..!!

13 January 2021, 3:38 pm
kkumari flower - updatenews360
Quick Share

கன்னியாகுமரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தை தென்மாவட்டங்களில் உள்ள பூ சந்தைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சந்தையில் கடந்த சில தினங்களாக பூக்களின் விலை மிகவும் குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலை உயர்ந்துள்ளது.

மல்லிகை கிலோ 2500 ரூபாயாகவும், பிச்சி பூ 1500 ரூபாயாகவும், உயர்ந்து உள்ளது. இதே போல் கிரேந்தி 100 ரூபாயும், செவ்வந்தி 250 ரூபாயும், சம்மங்கி ரூ 125 க்கும், கொழுந்து ரூ.150 க்கும் ரோஸ் 230 ரூபாயும், கோழிகொண்டை 60 ரூபாயும், தாமரை ஒரு பூ 10 ரூபாயும், என பூக்களின் விலை வழக்கத்தை விட உயர்ந்து உள்ளது.

வழக்கத்தை விட பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்வு என்ற போதிலும் பூக்களை வாங்கி செல்ல மக்கள் அதிகமாக வருகை தந்து உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பூக்களின் வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்து உள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.

Views: - 3

0

0