கரை திரும்பாத மீனவர்களுக்கு புயல் காரணமாக கரை திரும்ப வலியுறுத்தல்

1 December 2020, 2:46 pm
Quick Share

கன்னியாகுமரி: புயல் எச்சரிக்கை நடவடிக்கையாக குமரி மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் சிறப்பு புயல் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து கரை திரும்பாத மீனவர்களுக்கு புயல் காரணமாக கரை திரும்ப வலியுறுத்தப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி இலங்கையை கடந்து குமரி கடற்பகுதியில் நிலைகொள்ளும் எனவும் புயல் வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒஹி புயலில் 173 குமரி மாவட்ட மீனவர்கள் பலியாகினர். இதன் பாதிப்பில் இருந்து மக்கள் விடுபடாத நிலையில் தற்போது வரும் புயல் மீனவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தூத்தூர் மண்டலத்தில் உள்ள மீனவர்கள் இரண்டு மூன்று மாதங்கள் வரை தங்கி ஆழ்கடலில் மீன் பிடிக்கும் பழக்கமுடையவர்கள். இவர்கள் கோவா, மகாராஷ்டிரா, கர்நாடக, கேரளா பகுதிகளில் தற்போது மீன்பிடித்து வருகின்றனர்.

இவர்களுக்கு புயல் சம்மந்தமான தகவல்களை உடனடியாக வழங்கி அருகில் உள்ள துறைமுகங்களில் கரையேற அரசு அறிவுறுத்த வேண்டும் என அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை தொடர்ந்து அரசு சார்பில் குமரி மாவட்டத்தில் வள்ளவிளை, தூத்தூர், முட்டம், தேங்காய் பட்டணம் ஆகிய கடற்கரை பகுதிகளில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் திறந்து கடலில் இருக்கும் படகுகளுக்கு சாட் லைட் போன் மற்றும் போன் மூலமாக புயல் எச்சரிக்கையை தெரிவித்து வருகின்றனர். தற்போது குமரி மாவட்ட துறைமுகங்களில் இருந்து மீன் பிடிக்க சென்று கடலில் உள்ள 158 விசை படகுகளுக்கு தொடர்ந்து தகவல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Views: - 0

0

0