யானைகள் இறப்பு குறித்து சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்ட வன ஊழியர்கள்…

7 August 2020, 9:09 pm
Quick Share

கோவை: சிறுமுகை வனச்சரகத்தில் யானைகள் இறப்பு குறித்து வன ஊழியர்கள் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்ட வன அலுவலர் உத்தரவின் வெங்கடேஷ் பெயரில் யானைகளின் இறப்பு குறித்த விபரங்களை சேகரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது.சிறுமுகை வனச்சரகத்தில் 20 பேர் கொண்ட குழு 5 பேர் கொண்ட பிரிவுகளாக பிரிந்து வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் பெத்திக்குட்டை, கூத்தா மண்டி வடக்கு தெற்கு. உளியூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் யானைகளின் கூட்டம் கூட்டத்தில் உள்ள யானைகளின் எண்ணிக்கை யானைகளின் வழித்தடங்கள் கூட்டத்தில் உள்ள ஆண்-பெண் வகைப்படுத்துதல் வழித்தடங்களில் உள்ளே நீர் நிலைகளின் தன்மை உண்ணும் தாவரங்களின் வகைகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

யானைகளின் வழித்தடங்களில் 20 அடிக்கு ஒரு பிளாட் ஆகி பிரிக்கப்பட்டு இதில் என்னென்ன வகையான மரங்கள் உள்ளன, போன்றவற்றை ஆய்வில் குறித்துக்கொண்டு வனத் துறை தலைமையிலிருந்து வரும் கமிட்டிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். கமிட்டியினர் இந்த அறிக்கையிலிருந்து யானைகள் இறப்பதை தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நடந்த ஆய்வுகளில் சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனவர் சத்தியராஜ் வனக் காப்பாளர்கள் ராஜலட்சுமி கண்ணன் பயிற்சி வன அலுவலர்கள் நித்தியா சக்திவேல் , வன பணியாளர் ஆனந்தி மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டனர்.

Views: - 1

0

0