பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடியை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

3 July 2021, 3:56 pm
Quick Share

நீலகிரி: கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராமத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன், கேர்கம்பை, இந்திரா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு மற்றும் தேயிலைத் தோட்டங்களில் உலா வந்து பொது மக்களை அச்சுறுத்தி வந்த கரடி ஒருமாத போராட்டத்திற்குப் பின் கிராமத்தின் நடுவே வைக்கப்பட்ட இரும்பு கூண்டில் பழங்கள் முதலான உணவு பொருட்கள் வைத்து கண்காணித்து வந்த நிலையில் இன்று அதிகாலை கரடி கூண்டிற்குள் சிக்கியது. பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர் இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா தலைமையில் வனத்துறையினர்,

அதிவிரைவு வன காவலர்கள் மற்றும் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கூண்டிற்க்குள் சிக்கிய கரடி அதிக சத்தம் எலுப்பியும்,கூண்டை சேதப்படுத்தி தப்பிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் முறையில் கூண்டின் மேல் பெரிய கற்கள்,கட்டைகளை வைத்து கரடியை கூண்டை விட்டு வெளியே வராதவாறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன,பின்பு வனத்துறை மூலம் மாற்று கூண்டு கொண்டு வரப்பட்டது,பின் சேதப்படுத்திய கூண்டிலிருந்து மாற்று கூண்டிற்கு மாற்றி பெரும் போராட்டத்திற்கு பின் பிடிப்பட்ட கரடியை அடர்ந்த வனப்பகுதியில் விட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு கோரக்குந்தா, அவலாஞ்சி அடர்ந்த வனப்பகுதியில் விடப்படுகிறது.

Views: - 33

0

0