முன்னாள் பாஜக பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது

13 May 2021, 7:32 pm
Quick Share

அரியலூர்: இலைக்கடம்பூரில் 16 வயது சிறுமி இயற்கை உபாதைக்கு வெளிவாசல் சென்றபோது செல்போனில் புகைப்படம் எடுத்து மிரட்டிய முன்னாள் பாஜக பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் பாஜகவின் முன்னாள் வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் வசிக்கும் தெருவை சேர்ந்த 16 வயது சிறுமி இயற்கை உபாதைக்கு வெளிவாசல் சென்றபோது செல்போனில் புகைப்படம் எடுத்து அந்த சிறுமியிடம் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் அசோக்குமாரின் பெற்றோரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செந்துறை காவல் நிலையத்திலும், பின்னர் அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டது. இது தொடர்பாக அசோக்குமாரை கைது செய்து செல்போனில் படம் எடுத்துள்ளரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 137

0

0