காவலரை அரிவாளால் சரமாரியாக தாக்கிய குற்றவாளி: குண்டர் சட்டத்தில் கைது..!!

3 March 2021, 5:59 pm
trichy gundar - updatenews360
Quick Share

திருச்சி: பாலக்கரை காவல் நிலைய காவலரை தாக்கிய இளைஞரை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் வேல்முருகன். இவர் பாலக்கரை காவல்நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்து வரும் சங்கிலியாண்டபுரம் விஜய், தனது நண்பர் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த யுவராஜ் மற்றும் மற்றொரு நண்பர் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் செந்தண்ணீர்புறம் பகுதியில் செல்வதை கண்டு அவர்களை பிடிக்க முயற்சித்துள்ளார்.

அப்போது மூன்று பேரும் சேர்ந்து காவலர் வேல்முருகனை அரிவாளால் தாக்கி விட்டு அங்கிருந்து
தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கின் முக்கிய குற்றவாளியான விஜய் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் மற்றொரு குற்றவாளியான யுவராஜ், அரியமங்கலம் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகளுடன் சம்பந்தப்பட்டு இருப்பதும் அந்த வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதும் தெரியவந்தது.

இதனை அடுத்து காவல்துறையினர் அளித்த பரிந்துரையின் பேரில் யுவராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் யுவராஜ் திருச்சி மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

Views: - 6

0

0