சாலை விபத்தில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலி

Author: Udayaraman
13 October 2020, 3:05 pm
Quick Share

சிவகங்கை: சிவகங்கை அருகே திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை பகத்சிங் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் மனோகரன். இவர் கடந்த 1989 ஆண்டு சிவகங்கை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இவர்களுக்கு சாந்தி , சுகுணா ஆகிய இரண்டு மனைவிகள் உள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் மனோகரனும் அதே பகுதியை சேர்ந்த தைபுதீன் என்பவருடன் மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் மதுரை நோக்கி சென்றுள்ளனர். அப்போது படமாத்துர் விலக்கு அருகே இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவருடன் பயணித்த தைபுதீன் ஆகியோர்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தகவல் அறிந்த பூவந்தி காவல்துறையினர் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விபத்தில் பலியானதுஅப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 34

0

0