முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தந்தை நினைவு நாள்: மலர் தூவி அஞ்சலி..!!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2021, 12:35 pm
SP Velumani Father- Updatenews360
Quick Share

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தந்தையின் நினைவு தினத்தை முன்னிட்டு எஸ்.பி.வேலுமணியின் சகோதரர்கள் சமாதியில் நினைவஞ்சலி செலுத்தினர்.

அதிமுக.,வின் முன்னாள் மாவட்ட தொழிற்சங்க பொருளாளராக பதவி வகித்தவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தந்தை பழனிச்சாமி கவுண்டர். மேலும், அதிமுக., முன்னாள் பேரூர் ஒன்றிய கழக அவைத் தலைவராகவும் பதவி வகுத்துள்ளார்.

அவருடைய 18ம் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சுகுணாபுரம் பகுதியில் உள்ள அவரது சமாதியில் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர்களான எஸ்.பி.அன்பரசன், செந்தில்குமார் மற்றும் எஸ்.பி.வேலுமணியின் மகன் விகாஷ் வேலுமணி ஆகியோர் நினைவஞ்சலி செலுத்தினர்.

Views: - 196

0

0