ஆந்திராவிற்கு காரில் கடத்த முயன்ற அரியவகை பாலிக்கீட்ஸ் மண்புழுக்கள் பறிமுதல்: நான்கு பேரை கைது

26 October 2020, 11:34 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆந்திராவிற்கு காரில் கடத்த முயன்ற 30 கிலோ அரியவகை பாலிக்கீட்ஸ் மண்புழுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையம் அருகே ஆந்திராவிற்கு காரில் அரியவகை பாலிக்கீட்ஸ் மண்புழுக்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மீஞ்சூர் அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது பக்கிங்ஹாம் கால்வாய் , எண்ணூர் கழிமுகப் பகுதிகளில் வனத்துறையினரால் தடைசெய்யப்பட்ட அரியவகை பாலிக்கீட்ஸ் மண்புழுக்களை கடத்தல் கும்பல் ஏஜென்ட்கள் மூலம் கிலோ ஒன்றுக்கு1500 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி முயன்றது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து கடத்தி வரப்பட்ட 30 கிலோ எடைகொண்ட பாலீகீட்ஸ் மண் புழுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் கடத்தலில் ஈடுபட்ட மொய்தீன், அருள், மோகன், ரகு உள்ளிட்ட 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த கார் மற்றும் 2 இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர் மாதர்பாக்கம் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் அளித்து பறிமுதல் செய்யப்பட்ட பாலிக்கீட்ஸ் மண்புழுக்கள் மற்றும் நான்கு பேரையும் வாகனங்களுடன் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 12

0

0