ஆட்டோவில் குட்கா தயாரிக்கும் மூலப் பொருட்கள் எடுத்துச் சென்ற 4 பேர் கைது

By: Udayaraman
4 October 2020, 5:18 pm
Quick Share

சென்னை: மாதவரம் அருகே ஆட்டோவில் குட்கா தயாரிக்கும் மூலப் பொருட்கள் எடுத்துச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 35 கிலோ மூலப்பொருள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

சென்னை மாதவரம் பால்பண்ணை காவல்நிலையம் அருகில் போலீசார் வாகண சோதனையில் ஈடுபட்டிருந்த போது , சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்யும் போது ஆட்டோவில் பதுக்கி வைத்திருந்த 35 கிலோ குட்கா (மாவா) தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் எடுத்து வந்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து குட்கா மூலப்பொருட்கள் எடுத்து வந்த,

ஆனந்த், கவின்குமார், சரவணன், சரத்குமார் ஆகிய நான்கு பேரை கைது செய்து, 35 கிலோ மூலப் பொருட்களும் இரண்டு மிக்ஸி மற்றும் ஒரு ஆட்டோக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மாதவரம் பால் பண்ணை போலிசார் இதில் வேறு யாருவாது தொடர்பு இருக்கின்றதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 41

0

0