நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் 3 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி: மோசடி கும்பலுக்கு வலைவீச்சு

Author: kavin kumar
10 August 2021, 11:31 pm
Quick Share

மதுரை: பங்கு சந்தையில் அதிக லாபம் சம்பாரிக்கலாம் என கூறி மதுரையில் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் 3 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த மோசடி கும்பலுக்கு பொருளாதார குற்ற பிரிவினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுரை பொன்மேனி பகுதியில் உள்ள பெத்தேல் நகரில் செயல்பட்டு வந்த தனியார் ஆன்லைன் நிதி நிறுவனத்தை நடத்தி அதன்மூலம் பங்குசந்தையில் அதிக பணம் சம்பாரிக்கலாம் என ஏமாற்றி மதுரை ஆனையூரை சேர்ந்த சரவணகுமார் என்பவரிடம் இருந்து ரூபாய் 5,50,000 பணத்தை பறித்ததாக மதுரை மாநகர் பொருளாதார குற்றபுலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொருளாதார குற்றபுலனாய்வு பிரிவினருக்கு சரவணகுமாரை போல் 130 பேரிடம் இந்த நிறுவனத்தின் மூலம் பண மோசடியில் ஈடுப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாகவும்,

மேலும் இந்தநிறுவனம் மூலம் 3 கோடி ரூபாய் வரையில் மோசடி நடத்திருக்கலாம் என்பது தெரிய வந்ததை தொடர்ந்து FLY World Shares PVT LMT என்கிற நிறுவனத்தின் மீதும், அந்நிறுவனத்தின் உரிமையாளர் செய்யது பாரூக் (திண்டுக்கல்), பொது மேலாளர் அனந்தி மணிகண்டன் (திண்டுக்கல்) மற்றும் மனோஜ்(திண்டுக்கல்) ஆகிய 3 பேர் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மதுரை பொருளாதார குற்ற பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் போலீசார் தேடிவருகின்றனர். இதேபோல் இந்நிறுவனத்தில் பணத்தை செலுத்தி ஏமாற்றமடைந்தவர்கள் தங்களிடம் புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களின் பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொருளாதார குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Views: - 243

0

0