மாஸ்டர் திரைப்படம் பார்க்க வந்த பார்வையாளர்களுக்கு இலவச கரும்பு: போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனம்

14 January 2021, 6:28 pm
Quick Share

கிருஷ்ணகிரி: ஒசூரில் மாஸ்டர் திரைப்படம் பார்க்க வந்த பார்வையாளர்களுக்கு ரசிகர்கள் சார்பில் வழங்கப்பட்ட இலவச கரும்புகளை வாங்க ரசிகர்களும், பொதுமக்களும் முட்டியடித்து போட்டிப் போட்டுக்கொண்ட போது, போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்பலன்ஸ் வாகனம் சிக்கிக்கொண்டதால் பலரும் அதிருப்தி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரின் முக்கிய போக்குவரத்து இருக்கக்கூடிய தாலூகா அலுவலக சாலையில் உள்ள திரையரங்கில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் திரையிடப்பட்டுள்ளது. இன்று மாஸ்டர் படம் பார்க்க வந்த பார்வையாளர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் இலவசமாக 6 டன் கரும்புகளை வழங்கப்பட்டன. கரும்புகளை வாங்க ரசிகர்களும், பொதுமக்களும் முட்டியடித்து போட்டிப் போட்டுக்கொண்டதில் தாலூகா அலுவலகம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய முக்கிய சாலை போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது.

மருத்துவமனைக்கு வந்த 108 ஆம்பலன்ஸ் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதால் பலரும் அதிருப்தி அடைந்தனர். பின்னர் விஜய் மக்கள் மன்றத்தினர் சார்பில் போக்குவரத்து நெரிசலை சீர்ப்படுத்தி ஆம்புலன்ஸை அனுப்பி வைத்தனர். முறையாக திட்டமிடாத விஜய் ரசிகர்களால் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது, பின்னர் போலிசார் தலையிட்டு நெரிசலை கட்டுப்படுத்தி சீர்ப்படுத்தினர்.

Views: - 8

0

0