தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம்

Author: Udayaraman
2 January 2021, 5:43 pm
Quick Share

வேலூர்: வேலூரில் தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகைக்கண்காட்சியில் திரளான மக்கள் பங்கேற்றனர்.

வேலூர்மாவட்டம்,வேலூரில் மாவட்ட நூலகத்தில் தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மூலிகைக்கண்காட்சியும் நடைபெற்றது. இதனை மாவட்ட சித்த மருத்துவத்தின் பொறுப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியம் துவங்கி வைத்தார். இதில் மருத்துவர்கள் லட்சுமணன் ,பாஸ்கர்,உள்ளிட்ட பல சித்த மருத்துவர்கள் மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை சர்க்கரை அளவு பரிசோதனை கண்காட்சிக்கு வருபவர்களுக்கு இலவச மூலிகை முகக்கவசம் வழங்கினார்.

இக்கண்காட்சியில் நூற்றுக்கணக்கான மூலிகைகளும் இடம்பெற்றிருந்தது. அத்துடன் பொதுமக்களுக்கு இலவச முழு பரிசோதனை, எக்ஸ்ரே இலவச பரிசோதனை, இலவச மருத்துவம் குடியை மறக்க ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது. இதில் புற்று மகரிஷி சார்பில் அரிய வகை மூலிகைகள் மற்றும் மருத்துவ பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது வரவேற்பை பெற்றது. தற்போது கொரோனாவுக்கு பிறகு பொதுமக்கள் சித்த மருத்துவத்தை அதிக அளவில் நாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 50

0

0