25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுகூடிய நண்பர்கள்: ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தி பழைய நினைவுகள் பகிர்வு

Author: Udhayakumar Raman
24 October 2021, 2:57 pm
Quick Share

விருதுநகர்: 25 ஆண்டுகளுக்குப் பின்பு கல்லூரியில் ஒன்றாகப் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடி தங்களுடைய ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தி தம்முடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரி 75 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது, இந்த கல்லூரியில் கடந்த1992 முதல் 1995ஆம் ஆண்டு வரை பிகாம் பிரிவில் பட்டம் பெற்ற 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வருகின்றனர் இவர்கள் கல்லூரி பயின்று 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் இவர்கள் ஒன்று இணையும் நிகழ்வு VHNSNC கல்லூரியில் இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் 1992 முதல் 95 வரை கல்விகற்ற 60 மாணவர்கள் ஒன்றிணைந்து சில்வர் ஜுப்ளி விழா கொண்டாடினர் இந்த விழாவின் பொழுது தங்களுடன் பயின்று தற்பொழுது உயிரிழந்த மாணவர்களுக்கும் தங்களுக்கு கல்வி கற்றுத்தந்து தற்பொழுது மறைந்த ஆசிரியர்களுக்கும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது அதை தொடர்ந்து தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தினார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் 25 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று வெள்ளை நிற ஆடையில் ஒன்று கூடி தங்களுடைய பழைய நினைவுகளை இன்று நினைவுகூர்ந்து மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர்.

Views: - 95

0

0