கடும் நடவடிக்கை பாயும் ஆடிப்பெருக்கு தினம்… ஊரடங்கால் தூங்கிய தூங்கா நகரம்

2 August 2020, 1:28 pm
Quick Share

கொரோனா பரவுதலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது மாதந்தோறும் நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ஊரடங்கு தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 8 மணி வரை திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.

மற்ற அனைத்து கடைகளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டுள்ளது ஹோட்டல் மற்றும் டீக்கடைகள் 50% இருக்கைகள் மட்டுமே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஊரடங்கில் தளர்வு இருந்தாலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்ககை கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முழு ஊரடங்கு நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த மாதம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமையில் முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி இன்று மதுரை மாநகரில் பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்துநிலையம், கோரிப்பாளையம், கீழமாசி பகுதியில் அனைத்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. இன்றைய தினம் ஆடிப் பெருக்கு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள் ஆனால் முழு ஊரடங்கு காரணமாக அனைத்து கோவில்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. சாலைகளில் தேவையில்லாமல் வாகனத்தில் சுற்றி திரிந்தால் வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். கண்காணிப்பு பணியினை மதுரையில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளில் போலீஸ் தடுப்பு அமைக்கப்பட்டு சோதனை செய்து வருகிறது. முக்கியமான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தூங்காநகரம் தற்போது முழு ஊரடங்கு கால் மதுரை மாநகரம் தூங்கிக் கொண்டிருக்கிறது.

Views: - 25

0

0