கலைஞருக்கு கூடலூரில் தமிழக அரசு சார்பில் முழு உருவ சிலை நிறுவ வேண்டும்: மாவட்ட திமுக செயலாளர் வேண்டுகோள்

Author: kavin kumar
7 August 2021, 4:56 pm
Quick Share

நீலகிரி: தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தை உருவாக்கிய முத்தமிழ் அறிஞர் மறைந்த தலைவர் கலைஞருக்கு கூடலூரில் தமிழக அரசு சார்பில் முழு உருவ சிலை நிறுவ வேண்டும் என நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு முபாரக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறைந்த முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் முன்னிலையில் உதகையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது பேட்டியளித்த மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் :- தாயகம் திரும்பிய தமிழர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றிய போது அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற நோக்கில் அப்போதைய முதல் அமைச்சர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர்,

பந்தலூர் மற்றும் வால்பாறை பகுதிகளில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் என்ற நிறுவனத்தை உருவாக்கி, தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு குடியிருப்புகள் அமைத்து, அவர்களின் குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற அடிப்படை வசதி களை அமைத்துக் கொடுத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் நடவடிக்கை எடுத்ததன் பெயரில் இன்று சுமார் 7500 க்கும் மேற்பட்ட தாயகம் திரும்பிய தமிழர்கள், TANTEA எனப்படும் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தில் பணியாற்றி வருகின்றனர்.

அவ்வாறு தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தந்த முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் கூடலூரில் முழு உருவ சிலையை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா எக்ஸ்போ செந்தில் , இளங்கோ, பாண்டியராஜ், நகர ஒன்றிய செயலாளர்கள் உட்பட திமுகவின் அனைத்து நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர் .

Views: - 127

0

0