கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்தால் அதிமுக கூட்டணியில் தமாகா தொடரும்: ஜி.கே. வாசன் பேட்டி

12 October 2020, 5:16 pm
Quick Share

ராணிப்பேட்டை: பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தனி மனித ஒழுக்கம் வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின் உடனடியாக குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் எனவும் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

சோளிங்கர் பகுதியை சேர்ந்த முன்னாள் எம்.பி வேலு என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேலுவின்  வீட்டிற்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே. வாசன் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தடுப்பு விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், நெசவாளர் காப்பீட்டு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும் திண்டிவனம் நகரி ரயில் பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தெரிவித்த அவர், கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்தால் அதிமுக கூட்டணியில் தமாகா தொடரும் என்று தெரிவித்தார்.

மேலும் கூட்டணி கட்சிகளின் பலத்தைப் பொறுத்து அவர்களுக்கு முக்கியத்துவத்தை தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய நிலம் சார்ந்த சட்டத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் நோக்கத்திற்காக இருப்பது நியாயமல்ல என்று தெரிவித்த ஜி கே வாசன், இது விவசாயிகளுக்கு எதிர்க்கட்சிகள் செய்யும் துரோகம் இது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தனி மனித ஒழுக்கம் வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின் உடனடியாக குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்றும் சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Views: - 40

0

0