ஏதுமறியா சிறுவர்கள் நடத்திய விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

Author: Udhayakumar Raman
12 September 2021, 5:33 pm
Quick Share

விருதுநகர்: தமிழகத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அருப்புக்கோட்டையில் ஏதுமறியா சிறுவர்கள் தாங்களே களிமண்ணால் செய்த சிறிய சிலையை ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலையில் கரைத்தனர்.

விநாயகர் சதுர்த்தி திருவிழா, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. பல இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலை வைத்த முயற்சித்த இந்து அமைப்பினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தடை எல்லாம் உங்களுக்கு தான் எங்களுக்கு கிடையாது என ஏதுமறியா சிறுவர்கள் தாங்களே களிமண்ணால் செய்த சிறிய சிலையை ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலையில் கரைத்தனர். அன்பு நகரை சேர்ந்த சிறுவர்கள் களிமண்ணால் சிறிய விநாயகர் சிலைகளை உருவாக்கி அதை அட்டையில் வைத்து தூக்கிக்கொண்டு டயரில் பிளாஸ்டிக் பேப்பரை மாட்டி பறை போல் செய்து இசைத்துக்கொண்டே ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக ஊர்வலமாக வந்து செவல்கண்மாயில் உள்ள நீரில் கரைத்து மகிழ்ந்தனர்.

Views: - 141

0

0