தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை: இந்து முன்னணியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்

Author: Udhayakumar Raman
10 September 2021, 4:31 pm
Quick Share

தஞ்சை: தஞ்சையில் தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட்ட இந்து முன்னணி அமைப்பினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யக்கூடாது என தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தஞ்சை சீனிவாசபுரத்தில் இந்து முன்னணி அமைப்பினர் 4 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தினர்.தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்து முன்னணி அமைப்பினருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் அமீர்பீவி பேச்சுவார்த்தை நடத்தி விநாயகர் சிலையை கைப்பற்றி அருகில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட்ட இந்து முன்னணி அமைப்பினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Views: - 140

0

0