நொய்யல் ஆற்றில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்…

22 August 2020, 9:18 pm
Quick Share

கோவை: தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் 60க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் எளிமையான முறையில் நொய்யல் ஆற்றில் கரைக்கப்பட்டன.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைத்து வழிபடவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் சாடிவயல் ஆலந்துறை ஹை ஸ்கூல், சித்திரை சாவடி, மாதம்பட்டி, பேரூர் உள்ளிட்ட இடங்களில் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் தனியார் இடங்களில் சிறிய அளவிலான விநாயகர் முதல் ஐந்து அடி உயர சிலைகள் வரை வைத்து வழிபட்டனர்.

இதனையடுத்து காலை 11 மணி முதல் காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஹிந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 40 சிலைகள் உட்பட மொத்தம் 60 விநாயகர் சிலைகள் தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி எளிமையான முறையில் நொய்யல் ஆற்றில் கரைக்கப்பட்டன. இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்படும் அனைத்து சிலைகளும் சாடிவயல் சின்னாற்றில் கரைப்பது வழக்கம். ஆனால் இம்முறை கொரோனா பரவல் காரணமாக அந்தந்த பகுதியில் அருகிலுள்ள நொய்யல் ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 23

0

0